தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/உங்களை நீங்களே சோதியுங்கள்

உங்களை நீங்களே சோதியுங்கள்

உங்களை நீங்களே சோதியுங்கள்


ADDED : அக் 03, 2012 11:10 AM

Google News

ADDED : அக் 03, 2012 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யாரையும் சிறியவன், கீழானவன் என்று அவமதிக்காதீர்கள். உருவத்தைக் கண்டு ஏளனம் செய்யாதீர்கள்.

* எல்லா உயிர்களும் ஈசனின் கோயில். அதனால் அனைவருமே நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.

* உணவருந்தும் போது தேவையற்ற அவசரமோ, மிகவும் நிதானமோ கூடாது.

* தன்னைத் தானே சோதித்துக் கொள்ளவேண்டும். இதனால், தீமையில் இருந்து விலகி நம்மைத் திருத்தி கொள்ள முடியும்.

* பிறரிடம் எடுத்துச் சொன்னால் நாம் செய்த பாவம், புண்ணியம் இரண்டின் அளவும் குறைந்து போகும்.

* கடவுள் வழிபாடு ஒன்றே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்து உயர்ந்தகதிக்கு அழைத்துச் செல்கிறது.

* கரையான் போல மற்றவர்களின் செல்வத்தையும், புகழையும் கெடுத்து வாழ்வது கூடாது.

* நரை தோன்றிய பிறகாவது பிறவியை ஈடேற்றும் நல்ல அறவழிகளில் செல்ல முயற்சி செய்யுங்கள்.

* எல்லா உயிர்களிடமும் தூய அன்பு செலுத்தினால் மட்டுமே, கடவுளின் அருளைப் பெற முடியும்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us